தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் மெஷினிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Machinist
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் NAC / NTC in Machinist Trade முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21.02.2025 அன்று 18 முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு சேவை காலத்துடன் கூடுதலாக 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,900 + DA
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ டிரேடு படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://munitionsindia.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief General Manager, Cordite Factory Aruvankadu, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin -643 202.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2025.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.