தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Non ITI Attendant Operator Chemical Plant
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 6000
Ex ITI Attendant Operator Chemical Plant
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 7000
Ex ITI Laboratory Assistant Chemical Plant
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 7000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin - 643 202.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.