தமிழகத்தில் பி.எஸ்சி, நர்சிங், பி. ஃபார்ம், பி.பி.டி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கான பொது கலந்தாய்வு வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங், பி. ஃபார்ம், பி.பி.டி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing), பி. ஃபார்ம் (B.Pharm), பி.பி.டி (BPT) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 68,108 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 67,038 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing), பி. ஃபார்ம் (B.Pharm), பி.பி.டி (BPT) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப் பட்டியலைத் தெரிந்துகொள்ள Www.tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“