மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2020) இந்த தேர்வு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அட்மிட் கார்டு, மார்ச் மாதம் 27ம் தேதி வாக்கில் வழங்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Advertisment
Advertisements
நீட் 2020 தேர்வுக்கு மாணவர்கள், இதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய மாணவர்கள் திணறி வருவதால், விண்ணப்பித்த விண்ணப்ப படிவங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அதற்கான வாய்ப்பை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி அமைப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.
இதற்காக, இன்றுமுதல் ( ஜனவரி 15ம் தேதி) வரும் 31ம் தேதி வரை, நீட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://ntaneet.nic.in/ntaneet/welcome.asp மாணவர்கள் விண்ணப்ப படிவத்தில் மாற்றங்கள் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீட் 2020 தேர்வு முடிவுகள், ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் (இளங்கலை) 2020 தேர்வு, சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையிலான அடிப்படையில் 180 வினாக்களை கொண்டதாக தேர்வுத்தாள் வடிவமைக்கப்பட உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ( தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களிலிருந்து இந்த வினாக்கள் தெரிவு செய்யப்பட்டும். நீட் தேர்வு வினாத்தாள், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மருத்துவ படிப்புகளில் இளங்கலை பிரிவில் சேர, மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் சேர நீட் தேர்வு கட்டாயம் எனபது குறிப்பிடத்தக்கது.