அமெரிக்காவின் அகஸ்டானா பல்கலைக்கழகம் (Augustana University) இளங்லை பட்டப் படிப்புகளுக்கு 25 ஆயிரம் டாலர் மதிப்பிலான உதவித்தொகைக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த உதவித்தொகைகள் அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளன.
Advertisment
இந்தக் கல்வி உதவித்தொகைக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான augie.edu இல் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி
இந்திய மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் வணிகம், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், கணக்கியல் மற்றும் பல்வேறு துறைகளில் நான்கு வருட கல்வியின் போது $25,000 மதிப்புள்ள இளங்கலை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அகஸ்டானா பல்கலைக்கழக உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30, 2023 ஆகும்.
UG படிப்புகளுக்கான அகஸ்டானா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை:
Amount
IELTS (or Equiv)
SAT
GPA / %age
$15,000.00
6.0
Not required
3.0 (60%)
$20,000.00
6.5
1160
3.0 (60%)
$20,000.00
6.5
Not required
3.25 (70%)
$25,000.00
7.0
1230
3.25 (70%)
கல்வி உதவித் தொகை விவரம்
கம்ப்யூட்டர் சயின்ஸ், சாஃப்ட்வேர் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ், பிசினஸ் மற்றும் ஹார்டு சயின்ஸ் போன்ற பிரபலமான மேஜர்கள் உட்பட, அகஸ்டானா பல்கலைக்கழகம் இளங்கலைப் பட்டப் படிப்புகளின் பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது.
மேலும், மாணவர்கள் சிந்தனை, தகவல் தொடர்பு மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில், தாராளவாத கலை அணுகுமுறையுடன் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு இந்த நிறுவனம் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/