Advertisment

ஆஸ்திரேலியாவின் டீக்கின்; இந்தியாவில் வளாகத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி நார்மன் அல்பானீஸ் அகமதாபாத்திற்கு வருகை தரும் போது மார்ச் 8 ஆம் தேதி GIFT நகரில் டீக்கின் பல்கலைக்கழகம் தனது முதல் நேரடி வளாகத்தை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆஸ்திரேலியாவின் டீக்கின்; இந்தியாவில் வளாகத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்

டீக்கின் QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 266வது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் உலகின் சிறந்த 50 இளம் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது. (கிராபிக்ஸ் - அபிஷேக் மித்ரா)

Ritu Sharma , Vidheesha Kuntamalla

Advertisment

ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் குஜராத்தின் கிஃப்ட் (GIFT) சிட்டியில் உள்ள ஒரு சுதந்திரமான நேரடி வளாகம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மாற உள்ளது, என இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துக்கொண்டது. மார்ச் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி நார்மன் அல்பனீஸ் அகமதாபாத் வருகையின் போது அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

டீக்கின் பல்கலைக்கழகம் QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 266வது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் உலகின் சிறந்த 50 இளம் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது. இது தவிர, டீக்கின் பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி உலக தரவரிசையில் 250- 300 குழுவில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஸ்காலர்ஷிப் vs கல்விக் கடன்; வெளிநாட்டு படிப்புக்கு சிறந்தது எது?

குறைந்தபட்சம் இரண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு வளாகத்தை அமைக்க மத்திய அரசாங்கத்தை அணுகியுள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. ஆதாரங்களின்படி, டீக்கின் பல்கலைக்கழகம் ஏற்கனவே வளாகத்தை அமைக்க GIFT நகர ஒழுங்குமுறை அமைப்பான சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்திற்கு (IFSCA) விண்ணப்பித்துள்ளது, இந்தப் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் முதுகலை திட்டங்களுக்கு மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டபோது, ​​டீக்கின் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (தெற்காசியா) ரவ்னீத் பாவ்ஹா இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கருத்து பெற IFSCA தலைவர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ்-ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆஸ்திரேலியாவில் டீக்கின் பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களைக் கொண்டுள்ளது, அவை மெல்போர்ன் (பர்வுட்), ஜீலாங் (வார்ன் பாண்ட்ஸ் மற்றும் வாட்டர்ஃபிரண்ட்) மற்றும் வார்னம்பூல். இங்கு 132 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் சமூகத்தில் 27% இந்தியர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து சீனா (22%). ஏறக்குறைய மொத்தம் 60,000 மாணவர்கள் படிக்கின்றனர், அதிக எண்ணிக்கையாக அதன் மெல்போர்ன் பர்வுட் வளாகத்தில் 26000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

2022 பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் "உள்நாட்டு விதிமுறைகளிலிருந்து தளர்வுகளுடன்..." நிதி மேலாண்மை, நிதி தொழில்நுட்பம் (FinTech), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளை வழங்க GIFT சிட்டியில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்தியாவில் அதன் முதல் நேரடி வளாகத்தை அமைக்கும் டீக்கின் பல்கலைக்கழகத்தின் முடிவு வந்துள்ளது.

கடந்த வியாழன் அன்று IFSCA முறைப்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியது. அரசாங்க அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, டீக்கின் பல்கலைக்கழகம் தவிர, GIFT நகர கட்டுப்பாட்டாளருடன் வேறு சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அவற்றுள் மற்றொரு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் - வோல்லோங்கோங் பல்கலைக்கழகம் (UOW), இது QS உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகில் 85வது இடத்திலும் ஆஸ்திரேலியாவில் 10வது இடத்திலும் உள்ளது. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி, தொல்லியல், வேதியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், புவியியல், சட்டம், தத்துவம் மற்றும் புள்ளியியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி போன்ற பாடங்களில் UOW முதல் 150 தரவரிசைகளுக்குள் உள்ளது.

மே 2023க்குள் வகுப்புகளைத் தொடங்க GIFT சிட்டியில் சில தளங்களுடன் கூடிய கட்டிடங்கள் தொடங்கப்படும் என்று UOW செய்தித் தொடர்பாளர் கூறினார். UOW இன் துணைவேந்தர் பாட்ரிசியா டேவிட்சன், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேருடன் இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், GIFT நகரத்தில் ஒரு வளாகத்தை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

UOW நிதி, STEM திட்டங்கள் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும். (அடுத்த வாரம் துணைவேந்தரின் சந்திப்பின் அடிப்படையில் இது மாறக்கூடும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன). பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டண அமைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இது இந்திய அரசாங்கத்துடனான சந்திப்புகளுக்குப் பிறகு அடுத்த மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். 12 ஆம் வகுப்பின் தேர்ச்சிக்குப் பிறகு எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் சேர்க்கை அளவுகோல்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

UOW செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ஏராளமான இந்தியர்கள் தங்கள் ஆஸ்திரேலிய வளாகத்தில் படிப்புகளில் சேருவதைக் கண்டோம், இது UOW ஐ இந்தியாவில் ஒரு வளாகத்தை அமைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஊக்குவித்தது, என்று கூறினார்.

2023 ஆம் ஆண்டில், இந்திய மாணவர்கள் UOW இன் மிகப்பெரிய சர்வதேசக் குழுவை உருவாக்குகின்றனர், இது அவர்களின் மொத்த சர்வதேச சேர்க்கையில் கிட்டத்தட்ட கால் பகுதியைக் குறிக்கிறது. மொத்தத்தில், 2,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் UOW இல் சேர்ந்துள்ளனர், வணிகம், பொறியியல் மற்றும் தகவல் அறிவியல் ஆகியவை மிகவும் பிரபலமான படிப்புகளாக உள்ளன. UOW 8300க்கும் மேற்பட்ட இந்திய முன்னாள் மாணவர்களைக் கொண்டுள்ளது.

UOW ஏற்கனவே துபாய், மலேசியா, ஹாங்காங் மற்றும் UAE ஆகிய நாடுகளில் முழு அளவிலான வளாகங்களைக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வளாகங்களிலும் UOW ஆனது கணக்கியல் மற்றும் நிதி, விமான போக்குவரத்து, பொறியியல், கலாச்சாரம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளை வழங்குகிறது.

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நுழைவது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது, கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் நாட்டில் அவற்றின் நுழைவு, செயல்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கான சட்டத்தை இயற்ற முயற்சித்தன. முதலாவது 1995 இல் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. 2005-06 ஆம் ஆண்டிலும், வரைவு சட்டமானது அமைச்சரவை நிலை வரை மட்டுமே செல்ல முடிந்தது. 2010 ஆம் ஆண்டு UPA-II யின் கடைசி முயற்சியாக வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மசோதா வடிவில் எடுக்கப்பட்டது, இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது மற்றும் BJP, இடதுசாரிகள் மற்றும் சமாஜ்வாடி கட்சி எதிர்த்ததால் 2014 இல் காலாவதியானது.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள NDA அரசாங்கம், ஜூலை 2020 இல் தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் நுழைவுக்கான தனது உறுதிப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிப்ரவரி 2022 இல் GIFT நகர முயற்சியை அறிவித்தார். இந்தியாவில் வளாகங்களை அமைக்க விரும்பும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் வரைவு விதிகளை உருவாக்கி வருவதாக யு.ஜி.சி அறிவித்தது. இருப்பினும், IFSCA விதிகள் மட்டுமே பொருந்தும் GIFT City இல் உள்ளவற்றைத் தவிர, UGC விதிகள் அத்தகைய அனைத்து சாத்தியமான திட்டங்களுக்கும் பொருந்தும்.

GIFT நகரத்திற்கான IFSCA விதிமுறைகளின்படி, GIFT நகரத்தில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களால் வழங்கப்படும் படிப்புகள் அல்லது திட்டங்கள் "அனைத்து விதங்களிலும் அவர்கள் தாயகத்தில் வழங்கப்படும் படிப்பு அல்லது திட்டத்துடன் ஒரே மாதிரியாக இருக்கும்".

பட்டம், டிப்ளமோ அல்லது சான்றிதழ்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. இவையும் "அதன் சொந்த நாட்டு அதிகார வரம்பில் உள்ள தாய் நிறுவனத்தால் நடத்தப்படும் அதே அங்கீகாரம் மற்றும் அந்தஸ்தை அனுபவிக்கும்". விதிமுறைகள் வெளிநாட்டு நிறுவனங்கள் GIFT நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வளாகங்களில் இருந்து லாபத்தை திருப்பி அனுப்ப அனுமதிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment