scorecardresearch

ஆவடி டி.ஆர்.டி.ஓ நிறுவன வேலைவாய்ப்பு; பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஆவடி டி.ஆர்.டி.ஓ நிறுவன வேலைவாய்ப்பு; பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Avadi DRDO recruitment 2022 for Engineering vacancies apply soon: தமிழகத்தில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு ஆவடி டி.ஆர்.டி.ஓ  நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

Mechanical Engineering – 8

Electrical & Electronics Engineering – 3

Electronics & Communication Engineering – 4

Computer Science Engineering – 2

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.31,000

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 24 மாதங்கள். தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rac.gov.in/index.php?lang=en&id=0  என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.09.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_80_2223b.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Avadi drdo recruitment 2022 for engineering vacancies apply soon