scorecardresearch

ஆவடி கனரக தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 214 காலியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆவடி கனரக தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 214 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஆவடி கனரக தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 214 காலியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Avadi HVF recruitment 2022 for 214 apprentices jobs apply soon: ஆவடி கனரக தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 05.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் கனரக தொழிற்சாலை நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 214 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு நிரப்பப்பட உள்ளது.

கிராஜூவேட் அப்ரண்டிஸ் (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை – 104

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering) – 50

எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering) – 10

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (Computer Science Engineering) – 19

சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) – 15

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering) – 10

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

இதையும் படியுங்கள்: டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக முனியநாதன் நியமனம்

டிப்ளமோ அப்ரண்டிஸ் (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை – 110

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering) – 50

எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering) – 30

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (Computer Science Engineering) – 07

சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) – 05

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering) – 18

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

இந்த பணியிடங்களுக்கு 2019, 2020, 2021 ஆம் ஆண்டில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அதே இணையதளத்தில் Heavy Vehicles Factory என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவு செய்ய கடைசி தேதி : 25.06.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.07.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/06/HVF_Notification_2022_23.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Avadi hvf recruitment 2022 for 214 apprentices jobs apply soon