AYUSH Ministry clerk recruitment apply online 2019: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி அறிவியல் கழகத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிசன் கிளார்க் (ரூப் சி) என்ற பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்க ஆரம்பித்துள்ளது.
ஆர்வமுள்ள தேர்வர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.ccras.nic.in, என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, ayush.gov.in, ccrhindia.nic.in ccryn.gov.in என்ற இணைய முகவரியும் பாருங்கள்.
காலியிடங்கள்: மொத்த எண்ணிக்கை - 66
/tamil-ie/media/media_files/uploads/2019/11/ayush-ministry-300x115.jpg)
கல்வித் தகுதி: அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்,லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு பன்னிரெண்டாம் தேர்வை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வயது வரம்பு: 18 முதல் 27 வரை ( இந்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது )
விண்ணப்பிக்கும் தேதி : இந்த மாதம் 20ம் தேதி முதல் , அடுத்த மாதம் 19ம் தேதி வரை
தேர்வு நடைமுறை :
இரண்டு பணிகளுக்கும் எழுத்து தேர்வின் பயனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வு மல்டிப்லே சாய்ஸ் வகையில் இருக்கும். லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு கூடுதலாக தட்டச்சு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். (ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 எழுத்துக்கள், ஹிந்தியில் ஒரு நிமிடத்திற்கு ஒரு நிமிடத்திற்கு 30 எழுத்துக்கள்)
தேர்வு விவரம்:
அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கு:
/tamil-ie/media/media_files/uploads/2019/11/UDC-300x108.jpg)
லோயர் டிவிசன் கிளார்க் பணிகளுக்கு :
/tamil-ie/media/media_files/uploads/2019/11/ldc-300x153.jpg)
கட்டணத் தொகை : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ .100 செலுத்த வேண்டும்
சம்பளம் : எல்டிசி,யுடிசி இரண்டு பணிகளும் ரூ .5500-ரூ .20,200 சம்பளக் குழுவில் பணியமர்த்தப்படுவார்கள், இருப்பினும்,யுடிசி கிரேட்- பே (grade pay) ரூ .2400 , எல்டிசி பணிகளுக்கு ரூ .1900 கிரேட்- பே (grade pay) வழங்கப்படும் .