Educational Tamil News: 2022ஆம் ஆண்டிற்கான பி.எட். பட்டப்படிப்பின் ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது.
பி.எட். பட்டபடிப்பிற்காக சேர விருப்பப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக சென்னை, தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர எல்லாவற்றிலும் தேர்வின் முடிவுகள் வெளியாகி விட்டதால், பி.எட். பட்டபடிப்பிற்கான சேர்க்கை பணிகளை தனியார் கல்லூரிகள் தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் தரப்பில் நடக்கும் கவுன்சிலிங்கை தாமதமின்றி துவக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகள் நேற்று வெளிவந்துள்ளது.
ஆகையால், 2022ஆம் ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை பி.எட்.,இல் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அக்டோபர் 6ஆம் தேதி விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ஆம் தேதி முதல் அதற்கான கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil