Advertisment

Bank Exams 2022; வங்கி வேலை வேண்டுமா? IBPS, SBI தேர்வு தேதி இதோ…

வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு! IBPS மற்றும் SBI தேர்வுகளின் முழு அட்டவணை இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bank Holidays in February 2023

பிப்ரவரி 2023 இல் வங்கி விடுமுறை பட்டியல்

வங்கி வேலை என்பது பலருக்கு கனவு. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்கின்றனர். வங்கி வேலைவாய்ப்புகள் நாடு தழுவிய போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த வங்கித் தேர்வுகள் முக்கியமாக இரண்டு பெரிய அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. அவை IBPS மற்றும் SBI.

Advertisment

IBPS என்பது நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகளுக்கு கிளார்க் (Clerk), ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் கீழ் உள்ள பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தும் அமைப்பாகும்.

இதையும் படியுங்கள்: SBI JA 2022; பட்டப் படிப்பு தகுதி; எஸ்.பி.ஐ-யில் 5,008 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

மறுபுறம், SBI தனது சொந்த நிறுவனத்திற்கான கிளார்க், ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) காலியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

2022 வங்கித் தேர்வுகளை எதிர்நோக்கி உள்ளவர்களுக்காக எந்தெந்த தேர்வுகள் எப்போது நடைபெற உள்ளது என்ற முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம். தேர்வர்கள் இந்த அட்டவணைக்கு ஏற்ப தங்களை தயார் செய்துக் கொள்ளலாம்.

வங்கித் தேர்வுகள் 2022: IBPS, SBI தேர்வுகளின் தேதிகள்

IBPS கிளார்க் முதல்நிலைத் தேர்வு - செப்டம்பர் 2022

IBPS கிளார்க் முதன்மைத் தேர்வு- அக்டோபர் 2022

IBPS PO முதல்நிலைத் தேர்வு - அக்டோபர் 2022

IBPS PO முதன்மைத் தேர்வு- நவம்பர் 2022

IBPS RRB அதிகாரிகள் II மற்றும் III ஒற்றைத் தேர்வு- செப்டம்பர் 24, 2022

IBPS RRB அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி அளவுகோல் I முதன்மைத் தேர்வு- அக்டோபர் 2022

SBI கிளார்க் முதல்நிலைத் தேர்வு- நவம்பர் 2022

SBI கிளார்க் முதன்மைத் தேர்வு- டிசம்பர் 2022

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் IBPS, SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ibps Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment