Advertisment

வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 250 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளர் வேலை வாய்ப்பு; 250 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Bank of Baroda, MSME, BRLLR, retail loan rates, State Bank of India, Repo Rate, reserve bank of india, State Bank of India

பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளர் வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) முதுநிலை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Senior Manager - MSME Relationship

காலியிடங்களின் எண்ணிக்கை : 250

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம். அல்லது எம்.ஏ.பி படிப்புடன் 6 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.12.2023 அன்று 28 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 2.14 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2023

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.600. SC/ST பிரிவினர் ரூ.100

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-12/detailed-advertisement-senior-manager-05-20.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment