Advertisment

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 500 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கி வேலை வேண்டுமா? பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 500 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 500 அதிகாரி பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

Bank of Maharashtra invites application for 500 Generalist Officers vacancies apply soon: வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அதிகாரி ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் மகாராஷ்டிரா வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BANK OF MAHARASHTRA) பொது அதிகாரி (GENERALIST OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

GENERALIST OFFICERS Scale – II

காலியிடங்களின் எண்ணிக்கை : 400

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.48170 – 69810.

GENERALIST OFFICERS Scale III

காலியிடங்களின் எண்ணிக்கை : 100

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 25 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 63840 - 78230

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000, SC/ST பிரிவுக்கு ரூ.100, பெண்கள் மற்றும் PWD பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். எழுத்து தேர்வு என்பது கணினி வழி தேர்வாகும்.

எழுத்துத் தேர்வு:

எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) ஆக நடைபெறும். இந்த கொள்குறி வகை வினாத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language - 20), கணித திறனறிதல் (Quantitative Aptitude - 20) திறனறிதல் (Reasoning Ability - 20) மற்றும் வங்கி தொடர்பான கேள்விகள் (Professional Knowledge - 90) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு மொத்தம் 2 மணி நேரம். 

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 12.03.2022

நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.bankofmaharashtra.in/current_openings என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/1bcd7e4d-4ee1-4c10-85c0-19af390b79a0.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment