Advertisment

பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கு ஆர்வம் குறைகிறதா? 5 ஆண்டுகளாக 10 - 55% இடங்கள் காலி

பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கு குறைந்து வரும் ஆர்வம்; 5 ஆண்டுகளாக 10 - 55% இடங்கள் காலி; காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dental

பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கு குறைந்து வரும் ஆர்வம்; 5 ஆண்டுகளாக 10 - 55% இடங்கள் காலி; காரணம் என்ன?

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய நிறுவனங்களில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பல் மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு 10% முதல் 55% இடங்கள் காலியாகி வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

2016-17 மற்றும் 2022-23 க்கு இடையில் 1,89,420 இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS) இடங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36,585 இடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் (DCI) தரவு காட்டுகிறது. 2017-18 முதல் 2022-23 வரை, 38,487 முதுகலை பல் அறுவை சிகிச்சை (MDS) இடங்களில், 5,000 க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இதையும் படியுங்கள்: TN MBBS Counselling; தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; ஆகஸ்ட் 25-ம் தேதி தொடக்கம்

இடங்கள் காலியாக இருந்தாலும், நாட்டின் எதிர்கால சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தீவிரமாக அதிகரித்து வருகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2014 மற்றும் 2023 க்கு இடையில் பல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை BDS பட்டப்படிப்பில் 14% மற்றும் MDS பட்டப்படிப்புக்கு 48% அதிகரித்துள்ளது. பல் மருத்துவக் கல்வியின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவதே இந்த விரிவாக்கத்திற்குக் காரணம். 2021-22ல், அமைச்சகத்தின் தரவுகளின்படி இந்தியாவில் மொத்தம் 27,868 BDS இடங்களும் 6,814 MDS இடங்களும் இருந்தன.

ஆனால், பல ஆண்டுகளாக பல் மருத்துவப் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யாமல் இருப்பதற்கு தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகள் இல்லாமை மற்றும் சம்பளம் தேங்கி நிற்பதே முக்கியக் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பல் மருத்துவம் இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலாக இருந்தது. ஆனால், அரசுக் கல்லூரிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் பற்றாக்குறையாலும், மாணவர்கள் சரியான கல்வி மற்றும் பயிற்சியை பெற முடியாமல் திணறுகிறார்கள். மேலும், அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் துறையிலும் குறைந்த ஊதியம் உள்ளது. அதேநேரம் மெட்ரோ நகரங்களில் அதிக எண்ணிக்கையிலும், சிறிய நகரங்களில் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இந்த துறை வளராததற்கு காரணம். இன்று, பி.டி.எஸ்.,க்குப் பிறகு, பல பல் மருத்துவர்கள் எம்பிஏ அல்லது பொது சுகாதார நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் படி, 2023 ஆம் ஆண்டில், முதல் ஐந்து பல் மருத்துவக் கல்லூரிகளில் 4 தனியார் கல்லூரிகள் உள்ளன, டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மட்டுமே அரசுக் கல்லூரி. தனியார் கல்லூரிகளில், ஐந்தாண்டு இளங்கலை பி.டி.எஸ் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து படித்த நிலையில், குறைவான வருமானமே கிடைக்கிறது. MBBS அல்லது ஆயுர்வேத மருத்துவர்கள் கூட மாதம் ரூ20,000க்கு மேல் சம்பாதிக்கின்றனர். அதேபோல் முதுகலை படிப்புக்கான செலவும் அதிகம், ஆனால் வருமானம் குறைவு. மேலும், ஒரு புதிய பல்மருத்துவர் ஒரு தனியார் நிறுவனத்தை அமைப்பதற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும், என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மதிப்பெண்களைக் குறைக்க பரிந்துரைத்தது. முன்பு அகில இந்திய மருத்துவத்திற்கு முந்தைய தேர்வு (AIPMT), இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் MBBS, BDS மற்றும் AYUSH (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நாடு தழுவிய நுழைவுத் தேர்வாகும். வெளிநாட்டில் முதன்மை மருத்துவப் படிப்புகளைத் தவிர விரும்புபவர்களாலும் இந்தத் தேர்வு எழுதப்படுகிறது.

2020ல், பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான நீட் கட்-ஆஃப் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 10 சதவீத புள்ளிகளால் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட நீட் கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் 9,09,776 விண்ணப்பதாரர்கள் பி.டி.எஸ் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளதாக மருத்துவ ஆலோசனைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிடிஎஸ் சேர்க்கைக்கு 7,71,511 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், பல் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment