பி.இ vs பி.டெக் : தேர்வுக்கு பின் எதை தேர்வு செய்யலாம்

இந்தியாவில் செயல்படும் ஐ.ஐ.டி கல்வி நிருவனங்களால் தான் பி.டெக் படிப்பு செயற்கையான முக்கியத்துவம் பெற்றது. பிடெக் அளவுக்கு பி.இ. இல்லை என்று மக்கள் கருத ஆரம்பித்தனர்.

By: Updated: March 8, 2020, 04:01:08 PM

இளங்கலை பொறியியல் (பி.இ) இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்)  ஆகிய இரண்டும் இந்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை நிலை பொறியியல் படிப்புகளாகும் . இந்த இரண்டு படிப்புகளுக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர்க்கப்படுகின்றனர்.

இந்த இரண்டு படிப்புகளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், வேறுபாடுகள் மிக அதிகம்.

சென்னை ஐ.ஐ.டி கல்லூரியின் டீன் எம்.ஜக்தீஷ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “இரண்டு பிரிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நூல் அளவு தான் என்றாலும், அது நுட்பாமானது. உதாரணமாக,பி.இ படிப்பு கோட்பாடு சார்ந்ததாகும், பி.டெக் படிப்பு  நடைமுறை சார்ந்தது, நாம் அன்றாட  வாழ்வில் உணரக்கூடியது” என்றார்.

இரண்டு படிப்புகளையும் நாம் கோட்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும், பி.டெக் படிப்பு ஒரு குறிப்பிட்ட பிரிவின் அடிப்டைகளையும், மேம்பட்ட ஆய்வுகளையும் உள்ளடக்குகிறது. அதே நேரத்தில் பி.இ படிப்பு ஒரு அடிப்படைக் கல்வி போன்றது. எந்தவொரு, குறிப்பட்ட பிரிவையும் மேம்பட்ட ஆய்வுகளை செய்யாது.

மேலும், அவர் கூறுகையில்,“இந்தியாவில், பிடெக், பிஎஸ்சி இரண்டுமே பாடவரியாக ஒன்று தான். அந்த பட்டத்தை நீங்கள் எங்கு பெறுகின்றீர்கள் என்பதை பொறுத்தே வேறுபாடு உருவாகிறது.

ஐஐடி போன்ற ஒரு கல்வி நிறுவனத்தில் பி.டெக் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டம் புதுப்பிக்கப்படும். சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு செமஸ்டருக்கும் புதுப்பிக்கப்படும். இதுபோன்று மற்ற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதில்லை.

வெளிநாட்டில் சற்று வித்தியாசம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு  (ஏ.ஐ.சி.டி.இ) தலைவர் அனில் சஹஸ்ராபுதே கூறுகையில்,“ இந்தியாவில் செயல்படும் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களால் தான் பி.டெக் படிப்பு செயற்கைத் தனமான முக்கியத்துவம் பெறுகிறது. பிடெக் அளவுக்கு பி.இ இல்லை என்று மக்கள் கருத ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக, வெளிநாடுகளை நாம் கவனித்தோமானால், ​​பிடெக் ஒரு தொழில்முறை வகை பட்டமாகவும், பி.இ.யை விட தாழ்ந்ததாகவும் கருதப்படுகிறது”என்று தெரிவ்வித்தார்.

ஆயினும், ஐ.ஐ.டி ஆசிரியர்,”ஒவ்வொரு நாடு கொண்டிருக்கும் கல்வி கண்ணோட்டத்தினால் வேறுபாடு எழுகிறது என்று தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பி.எஸ் (இளங்கலை அறிவியலில்) என்பது ஒரு பொதுவான பட்டம். சில நாடுகளில், அவர்கள் இதை டிப்ளோமா என்று அழைக்கிறார்கள்.  இந்த வகையான படிப்புகள் இந்தியாவில் குறைந்த மதிப்புதியதாக கருதப்படுகிறது,”என்றும் எம். ஜகதீஷ் சுட்டிக்காட்டினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:%e0%ae%aa%e0%ae%bf %e0%ae%87 vs %e0%ae%aa%e0%ae%bf %e0%ae%9f%e0%af%86%e0%ae%95%e0%af%8d %e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d %e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X