மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா, 517 பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 517 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Trainee Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை: 517
கல்வித் தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech in Engineering (Electronics, / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical /Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.02.2024 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். M.E/M.Tech படித்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: முதல் வருடம் ரூ. 30,000 இரண்டாம் வருடம் ரூ. 35,000 மூன்றாம் வருடம் ரூ. 40,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfWbNC9vtwJ_Y2-RXsz4Pqb83Mh-q3quYiG2TaXFsJL8cNxRQ/viewform?pli=1 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20TE%20Web%20Advt%2028022024%20HLS%20and%20SCB-27-02-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“