scorecardresearch

BEL Recruitment 2022; பெல் நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு; பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பி.இ அல்லது பி.டெக் படித்திருக்கிறீர்களா? பெல் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!

BEL recruitment 2022 for Trainee Engineers apply soon: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா, 75 டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.02.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 75

கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech (Computer Science, Information Technology/Information Science/Computer Science & Engineering/ Electronics/Electronics & Communication/Mechanical/Electrical) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.02.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: முதல் வருடம் ரூ.30,000, இரண்டாம் வருடம் ரூ.35,000, மூன்றாம் வருடம் ரூ.40,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdem5WtyDL3tcrR-4IsOluTl7UcUcoZMEEnG6w30IDH7FtSKQ/viewform என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20for%20Walk%20In%20for%20Software-1-02-2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Bel recruitment 2022 for trainee engineers apply soon