மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா, 82 பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 82 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 63
Electronics and Communication Engineering- 28
Mechanical Engineering - 25
Electrical & Electronics Engineering - 5
Computer Science and Engineering - 3
Civil Engineering – 2
கல்வித் தகுதி: 01.04.2020க்குப் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 17,500
Technician (Diploma) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
Electronics and Communication Engineering- 5
Mechanical Engineering – 5
கல்வித் தகுதி: 01.04.2020க்குப் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,500
B.Com Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: 01.04.2020க்குப் பிறகு B.Com படித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 10,500
வயதுத் தகுதி: 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ/ டிகிரி/ இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.01.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: BHARAT ELECTRONICS LIMITED NANDAMBAKKAM CHENNAI - 600 089
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/08-2023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“