மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 511 பொறியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகும். இந்தியாவின் முதன்மை மின்னணுவியல் நிறுவனமான இது பெங்க்ளூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 511 திட்டப் பொறியாளர் மற்றும் பயிற்சி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இருவேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி பொறியாளர் – I (Trainee Engineer – 1)
காலியிடங்கள்: 308
வயதுத் தகுதி: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 4 வருட பொறியியல் படிப்புகளில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிகஸ் & டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில், பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST and PwD பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
சம்பளம்: முதல் ஆண்டு- ரூ.25000, இரண்டாம் ஆண்டு- ரூ.28000, மூன்றாம் ஆண்டு – ரூ.31000
திட்டப் பொறியாளர் - I (Project Engineer – I)
காலியிடங்கள்: 203
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி – 4 வருட பொறியியல் படிப்புகளில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிகஸ் & டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில், பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST and PwD பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
முன் அனுபவம்: 2 வருட துறை சார்ந்த பணி முன் அனுபவம் அவசியம்.
சம்பளம்: முதல் ஆண்டு- ரூ.35000, இரண்டாம் ஆண்டு- ரூ.40000, மூன்றாம் ஆண்டு – ரூ. 45000, நான்காம் ஆண்டு –ரூ. 50000
விண்ணப்பக் கட்டணம்
பயிற்சி பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 200
திட்டப் பொறியாளர் - I பணியிடத்திற்கு ரூ. 500
தேர்வு செய்யப்படும் முறை
பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி முன் அனுபவங்களில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.bel-india.in அல்லது https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 15.08.2021.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.