பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கார்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பில் உள்ள சிந்தி தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த பள்ளியின் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னாவின் பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி என்பதால் சிந்தி சமூகத்தை பற்றிய விவரங்களை மட்டும் சேர்க்க விதிமுறை உள்ளது.
இந்நிலையில் சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமன்னா, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னாவை பற்றிய பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் புகாரும் அளித்துள்ளனர்,