12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் எனும்போது பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம் அல்லது பொறியியல் தான். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக பொறியியல் படிப்புகள் உள்ளது. இந்தப் பொறியியல் படிப்புகளில் எந்த பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
Advertisment
இந்தநிலையில், இன்ஜினியரிங் எந்த பிரான்ஞ்க்கு மவுசு அதிகம். எது படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். எந்த பிரான்ஞ்க்கு எதிர்காலம் உள்ளது போன்வற்றை தெரிந்துக் கொள்வது அவசியம். பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு மற்றும் சிறந்த துறையாக வரவுள்ள துறையை கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கியுள்ளார்.
ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில், 2023ல் பொறியலில் சேரும் மாணவர்கள் 2027ல் படிப்பை முடிப்பர். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் டிஜிட்டல் துறைகளில் தற்போது நடந்து வரும் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் (இ.சி.இ), எலட்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ் (இ.இ.இ) படிப்புகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
ஒயர்லஸ் நெட்வொர்க், 5ஜி-ஐ விட அதிவேகமான செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள், எல்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. மேலும், செமி கண்டக்டர், சிப் டிசைன், மின்சார வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருவதால் இ.சி.இ அல்லது எலக்ட்ரிக்கல் படிப்புகளை படிப்பது சிறந்தது.
இதுதவிர குவாண்டம் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ் துறைகளும் நல்ல வளர்ச்சி பெற்று வருவதால், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் பிஸினஸ் சிஸ்டம் போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.
சாப்ட்வேர் யுகம் முடிவடைந்து, விர்ச்சுவல் டிஜிட்டல் யுகம் ஆரம்பிக்க உள்ளதால், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் படிப்புகளான டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற படிப்புகளை படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புகள் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரும்.
அதேநேரம், மின்சார வாகனங்கள், ஆட்டோமேசன் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கி கற்றுத் தரும் குறிப்பிட்ட சில முன்னணி கல்லூரிகளில் மெக்கானில் படித்தாலும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு பெறுவது எளிது.
பி.எஸ்.சி படிப்புகளை விட இன்ஜினிரியங் படிப்பது சிறந்தது. ஆனால் டாப் கல்லூரிகளில் படிப்பது முக்கியம், எனவே அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.