/indian-express-tamil/media/media_files/FLLAX76u03LRdu3Ti7E7.jpg)
Best librarian award
மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வழங்கப்படும் சிறந்த நூலகருக்கான, 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்கு, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் நூலகர் கி.கோவிந்தன் இந்த ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கி.கோவிந்தன், முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர். நூலக அறிவியல் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்று சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியவர்.
2003 ஆம் ஆண்டு பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் பணியில் சேர்ந்தார்.
126 பிஎச்டி மாணவர்களுக்கும், 263 எம்ஃபில் மாணவர்களுக்கும் ஆய்வின்போது உதவியிருக்கிறார். ‘இந்தியாவில் நூலகங்களின் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலின் ஆசிரியர்.
மணற்கேணி ஆய்விதழ் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நூலகர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திரு நரேந்திரன், உத்திராடம், ராஜேஷ் தீனா, முனைவர் செ.காமாட்சி ஆகியோர் இதுவரை இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதில் தேர்வு செய்யப்படும் நூலகருக்கு,பாராட்டுப் பட்டயமும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும். நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும், என்று மணற்கேணி ஆசிரியர் முனைவர் து.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.