’’மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்கு மாதம் ரூ. 3000 அரசு உதவித் தொகையுடன் முழு நேர இலவசப் பயிற்சிக்கு மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
2021-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள சிவில் சர்வில் முதல்நிலைத் தேர்வுக்குரிய முழு நேர இலவசப் பயிற்சியை பாரதியார் பலகலைக்கழக அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப் பணியில் பயிற்சி மையம் வரும் பிப்ரவர் மாதம் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. பயிற்சி மையத்தில், விடுதியில் தங்குமிடம் ( வெளி மாவட்ட மாணவ/ மாணவிகள் 60 நபர்கள்), நூலக வசதி, ரூபாய். 3000/ - மாத உணவுப்படி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மாணவ, மாணவிகள், 2021 ஜனவரி.30-ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சி மையத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பாரதியார் பல்கலைக்கழக வளகாத்தில் 30ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத்தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, நுழைவுச் சீட்டு, கல்விச் சான்று, சாதிச்சான்று, ரூ. 5-அஞ்சல் முத்திரை ஓட்டப்பட்ட சுயமுகவரி எழுதப்பட்ட அலுவலக கவர் இணைத்து ஜனவரி 1ம் தேதிக்குள் “ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் ’’.
என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.