Bhel Project Engineers, Supervisors Jobs: சிவில் துறையில் திட்ட பொறியாளர்கள் (பி.இ / பி.டெக்) திட்ட மேற்பார்வையாளர்கள் (டிப்ளோமா வைத்திருப்பவர்கள்) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அழைக்கும் அறிவிப்பை பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
23 காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கும் பயனர்கள் இரண்டு வருடத்திற்கு மட்டும் பணி அமர்த்த்ப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் இன்ஜினியருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 3
சிவில் மேற்பார்வையாளருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 20.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/BHEL-1-300x89.jpg)
முக்கியத் தேதிகள்: விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 21 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. டிசம்பர் 2ம் தேதியே ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/எஸ்.டி போன்ற பயனர்களுக்கு அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு பெறுவார்கள்.
கல்வித் தகுதி: திட்ட பொறியாளர்களுக்கு, சிவில் துறையில் முழுநேர பி.இ / பி.டெக் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன், எஸ்.சி/எஸ்.டி - 50% )
இரண்டு வருடம் முன் அனுபவம் தேவை
திட்ட மேற்பார்வையாளருக்கு, சிவில் துறையில் முழுநேர டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். ( குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன், எஸ்.சி/எஸ்.டி - 50% )
ஒரு வருட முன் அனுபவம் தேவை
ஊதியம்:
திட்ட பொறியாளர்கள் பதவிக்கு மாத ஊதியமாக ரூ.66,000
திட்ட மேற்பார்வையாளர்கள் பதவிக்கு மாத ஊதியமாக ரூ. 36,850
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப கட்டணம் ரூ .200 செலுத்த வேண்டும்.
BHEL ஆட்சேர்ப்பு 2019: விண்ணப்பம் செய்வது எப்படி?
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளம்- https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings யைப் பார்வையிடவும்
ஸ்டேப் 2: ‘திட்ட பொறியாளர்கள் / டிப்ளோமா வைத்திருப்பவர்களின் ஆட்சேர்ப்பு’ என்று சொல்லும் இணைப்பைக் கிளிக் செய்க.
ஸ்டேப் 3 : ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்க
ஸ்டேப் 4 : விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க.
ஸ்டேப் 5 : விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்க.
மிக முக்கியம் : பயனர்கள் சமர்ப்பித்த விண்ணப்ப நகலையும், ஆன்லைன் கட்டண ரசீதையும் “ஏஜிஎம் (எச்ஆர்), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு, பிபி எண் 2606, மைசூர் சாலை, பெங்களூரு -560026 " என்ற முகவரிக்கு டிசம்பர் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு