தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 கடைசி தேதியாகும்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருமயம் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 99 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 29
Mechanical - 18
Production – 2
Electrical & Electronics - 1
Electronics & Communication – 2
Civil – 1
Computer Science - 1
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accountant – 2
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant-HR – 2
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 9,000
Technician (Diploma) Apprentices
மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 11
Mechanical - 8
Electronics & Communication – 1
Electrical & Electronics - 1
Civil Engineering - 1
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 8,000
Trade Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை – 59
Fitter – 35
Welder – 13
Machinist – 5
Instrument Mechanic – 2
Electrician – 2
Mechanic (Motor Vehicle) – 1
Plumber – 1
கல்வித் தகுதி: 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 8,050
வயது தகுதி: 01.09.2024 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.