Advertisment

சென்னை தொழிற்பயிற்சி வாரிய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை உள்ள தென்மண்டல தொழிற்பயிற்சி வாரியத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Boat SR jobs

சென்னை உள்ள தென்மண்டல தொழிற்பயிற்சி வாரிய வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள தென்மண்டல தொழிற்பயிற்சி வாரியத்தில் பகுப்பாய்வாளர், முதுநிலை எழுத்தர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor's Degree in Arts, Science or Commerce படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 29,200

Upper Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 25,500

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : 8 ஆம் படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,900

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://boat.cbtexamportal.in/#/login என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director of Training, Board of Apprenticeship Training (Southern Region), 4th Cross Road, CIT Campus, Taramani, Chennai-600113.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2023/09/RIS_for_AnalystUDC_and_Driver.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment