/tamil-ie/media/media_files/uploads/2019/09/british.jpg)
British Airways Strike affect Student joininh UK university
British airways Strikes affect students : ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகள் தொடர்பான விசயங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த இரண்டு நாட்களிலும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்திருந்தது.
இன்று(புதன் கிழமை) என்னதான் விமானிகள் பணிக்குத் திரும்பினாலும், கடந்த இரண்டு நாட்களின் தாக்கத்தால் இன்று 300 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் வழக்கம் போல் இயங்கவில்லை. விமானிகளின் கோரிக்கையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை.மேலும், இந்த மாத இறுதியில் (செப்டெம்பர் 27 ) விமானிகள் மற்றொரு வேலைநிறுத்தம் திட்டமிமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
இதனால், இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் இலையுதிர் காலத்தில் ஆரம்பிக்கும் படிப்புகளில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு கடும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. இருபதாயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் டயர் 4 (மாணவர்) விசாக்கள் வைத்திருக்கின்றனர் என்பது குரிப்பிடத்தக்கது .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.