/tamil-ie/media/media_files/uploads/2017/07/iit.jpg)
IIT Semester Classes Online , Chennai IIT autumn Semester Online
Bsc Degree Engineering in IIT : வரும் வெள்ளியன்று நடக்கவிருக்கும் ஐஐடி கவுன்சில் கூடத்தில் ஐஐடி கல்லூரிகளின் நிர்வாகத் திறன் மேம்படுத்துவதற்காக பல முக்கிய முடிவுகள் விவாதிக்கப் படவுள்ளன. அதிலும் குறிப்பாக, ஐஐடி படிப்பில் மதிப்பெண் அடிப்படையில் சோபிக்காத மாணவர்கள் மூன்றாண்டு நிறை வடைந்ததும் பி.எஸ்.சி பட்டம் பெற்று வெளியேறும் சாத்தியக் கூறுகள் பற்றிய விவாதம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நான்கு ஆண்டுகாள ஐஐடி பி.டெக் தொழிற்முறை படிப்பு இந்தியாவில் மிகவும் பிரசித்து பெற்றது . 13,500 க்கான இடங்களுக்காக ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் ஜேஇஇ போட்டித் தேர்வில் சுமார் ஒன்பது லட்சம் மக்கள் கலந்து கொள்வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது .
இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள தகவளின்படி , கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் 2,461 பி.டெக் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் பயிலும் மாணவர்கள் போசமான கல்வி போன்ற வெவ்வேறு காரணங்களால் ஐ.ஐ.டி கல்லூரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுளனர். உதாரணமாக, இந்த வருடம் ஐஐடி கான்பூர் மதிப்பெண் அடிப்படையில் 18 மாணவர்களை வெளியே தள்ளியது.
இன்று நடக்கும் ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால், நடப்பு கல்வியாண்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐ.ஐ.டி.க்களும் இந்த ஆலோசனையை செயல்படுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், குறிப்பிட்ட கலவித் தகுதியை நிறைவு செய்யும் மாணவர்கள் , தங்கள் இரண்டாம் செமஸ்டருக்கு மேலாக பி.எஸ்.சி படிப்பாக மாற்ற முடியும்.
ஐஐடி கவுன்சில் என்பது நாட்டிலுள்ள ஐஐடி கல்லூரிகள் தொடர்பாக முடிவெடுக்கும் முக்கிய அமைப்பாகும். இந்த கவுன்சின் தலைவாரக இந்தியாவின் உயர்க் கல்வித் துறை அமைச்சர் இருப்பார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.