BSF Recruitment 2019: எல்லை பாதுகாப்புப் படையில் 1356 காலியிடங்கள்!

BSF Constable Vacancy 2019: ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும். 

BSF Recruitment, BSF jobs
BSF Recruitment, BSF jobs

Border Security Force (BSF) Constable Recruitment 2019: எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எஃப்) 1,356 கான்ஸ்டபிள் பதவிகள் காலியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதற்கு நவம்பர் 7-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்லை பாதுகாப்பு பணியில் சேர ஆர்வமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in -ல் விண்ணப்பிக்கவும்.

ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக்கின் யூ.டி.க்களைச் சேர்ந்தவர்கள் கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

காலியிட விபரம் 

மொத்த காலியிடம் – 1356

கல்வித் தகுதி 

கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன்அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

ஆகஸ்ட் 1, 2019 தேதியன்று, விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, உடல் தர சோதனை (பி.எஸ்.டி), உடல் திறன் சோதனை (பி.இ.டி) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் : நவம்பர் 7

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14, 2019.

எவ்வாறு அப்ளை செய்வது? 

அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in – யை விசிட் செய்யவும்.

’அப்ளிகேஷன் ப்ராசஸ்’ என்பதை க்ளிக் செய்யவும்.

பெயர், கல்வித்தகுதி மற்ற விபரங்களை பதிவிடவும்.

தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.

பின்னர் ‘சப்மிட்’ என்பதை க்ளிக் செய்யவும்.

அதை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsf recruitment 2019 1356 vacancies apply bsf nic in

Next Story
தமிழ் மொழி ஆர்வலரா? தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com