Harikishan Sharma
Cabinet nod for National Recruitment Agency to conduct tests for govt jobs : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை முதன்மை தேர்வை நடத்த தேசிய ஆள்தேர்வு முகமை (National Recruitment Agency (NRA) என்ஆர்ஏ) உருவாக்க ஒப்புதல் வழங்கியது. பொது தகுதி சோதனை (சிஇடி) என்று பெயரிடப்பட்ட அந்த தேர்வுகள் மூலம் மத்திய அரசின் க்ரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வர்.
முதல்மட்டத்தில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும். தற்போது இந்த தேர்வுகளை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) , ரயில்வே பணியாளர்கள் ஆணையம் (RRB) மற்றும் வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தி வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கேபினட் கூட்டம் முடிவுற்ற பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், சி.இ.டி. தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில், சிறப்பு அடுக்குகள் மூலம் இறுதி கட்ட தேர்வுகள் நடைபெறும் அதனை அந்தந்த தேர்வு நிறுவனங்கள் மற்றும் முகமைகள் நடத்தும். தற்போது இருக்கும் ஐ.பி.பி.எஸ், ஆர்.ஆர்.பி மற்றும் எஸ்.எஸ்.சி தொடர்ந்து இயங்கும் நெறும் அறிவ்க்கப்பட்டது. மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பட்டதாரிகள், மேல்நிலைப்பள்ளி (12ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் மெட்ரிகுலேட் (10ம் வகுப்பு தேர்ச்சி)
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இன்று பணிகளுக்காக இளைஞர்கள் பலமுறை தேர்வுகள் எழுத வேண்டியிருக்கிறது. அரசு 20க்கும் மேற்பட்ட தேர்வு ஆணையங்களை வைத்துள்ளது. மூன்று அல்லது நான்கு தேர்வுகளை ஒருவர் எழுதுகின்றார் என்றால் அவர் பல்வேறு முகமைகளுக்கு கீழ் தேர்வு எழுத வேண்டியது உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரலாற்றுப்பூர்வமான முடிவு மேற்கொள்ளப்பட்டு தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆள்தேர்வு முகமை இளைஞர்களுக்கு பெரிய வரம் என்று கூறியுள்ளார். இந்த பொதுவான தகுதித்தேர்வு முறை பல்வேறு தேர்வு முறைகளை ரத்து செய்துவிட்டு நமக்கான நேரத்தையும் வளத்தையும் மிச்சம் செய்யும். இது வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : பாஜகவின் வெறுப்பு கருத்துகள் : சசி தரூரால் முகநூல் நிறுவனத்திற்கு சம்மன் அளிக்க முடியுமா?
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது பணியாளர்களை அமர்த்தும் மொத்த செயலையும் எளிமைப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். இந்த தேர்வுகள் 12 மொழிகளில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆள்தேர்வு முகமை மத்திய செயலாளருக்கு இணையான அலுவலரால் தலைமை ஏற்கப்படும். இதில் எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, மற்றும் ஐ.பி.பி.எஸ் முகமைகளில் இருந்து பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1,517.56 கோடி இதற்காக நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
DoPT செயலாளர் சி. சந்திரமௌலி “ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் 1.25 லட்சம் குரூப் சி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்காக 2.5 முதல் 3 கோடி நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 50க்கும் மேற்பட்ட தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால் தேர்வர்கள் தங்களின் சி.இ.டி மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.