Advertisment

தாமதம் ஆகும் விசா பிராசஸிங்: ஜனவரியில் கனடா செல்லும் மாணவர்கள் கவலை

மாணவர்களுக்கு விசா நடைமுறைகளில் உதவும் ஆலோசகர்கள் மற்றும் ஏஜெண்ட்கள், மாணவர்கள் தங்கள் விசாக்களை கையில் பெறுவதில் 60 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என்று மதிப்பிடுகின்றனர்.

author-image
WebDesk
New Update
canada india visa

Visa delay likely, shadow on winter enrolment plans of Canada-bound students

சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து கனட விசா மற்றும் தூதரக சேவைகளை திரும்பப் பெறுவது, அடுத்த ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழகங்களில் சேரத் தயாராகும் மாணவர்களுக்கு தடையை உருவாக்கியுள்ளது.

Advertisment

ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதால் விசா பிராசஸிங்கில் அவர்கள் தாமதத்தை சந்திக்க நேரிடும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர், புதிய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இவை துரதிர்ஷ்டவசமாக முன்பை விட மெதுவாக பிராசஸ் ஆகும்’, என்றார்.

மாணவர்களுக்கு விசா நடைமுறைகளில் உதவும் ஆலோசகர்கள் மற்றும் ஏஜெண்ட்கள், மாணவர்கள் தங்கள் விசாக்களை கையில் பெறுவதில் 60 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என்று மதிப்பிடுகின்றனர்.

அந்தந்த நகரங்களில் பாஸ்போர்ட் ஸ்டாம்பிங்கைக் கையாளும் துணைத் தூதரகங்கள் மற்றும் அவற்றின் மூன்றாம் தரப்பு ஏஜென்சிகளுடன் வழக்கமாக 10 நாட்கள் எடுக்கும் அப்ரூவல் பிராசஸ், இப்போது புது தில்லியில் உள்ள கனட ஹை கமிஷன் மேற்கொள்ளும் என்பதால் கணிசமாக அதிக நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான விசா பெறுவதில் உடனடி தாக்கம் தாமதமாகும். உள்ளூர் தூதரகத்தில் விண்ணப்பிக்க முடியாது, இதற்காக ஒருவர் இப்போது டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கும், என்று மும்பையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் வைரல் தோஷி கூறினார்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்களிடையே வெளிநாட்டுக் கல்விக்கான இரண்டாவது பெரிய இடமாக கனடா உள்ளது.

டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, கனடாவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர் தொகையில் இந்திய மாணவர்கள் 39.5 சதவீதம் பேர் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் சுமார் 10 பில்லியன் கனட டாலர்களை, நாட்டின் கல்வித் துறைக்கு வழங்குகிறார்கள்.

எனவே வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, டிசம்பரில் கனடாவுக்குப் புறப்படத் தயாராகும் வருங்கால மாணவர்களிடையே பதற்றமும் அச்சமும் அதிகமாக உள்ளன.

தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார் சாத்தப்பன் (32), சஸ்காட்சுவான் மாகாணத்தில் (Saskatchewan) உள்ள சஸ்காட்சுவான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓராண்டு முதுகலை பட்டயப் படிப்பில் சேர அனுமதி கிடைத்துள்ளது. கனடாவில் படிக்க, கல்விக்கடன் பெற்று, ஏற்கனவே 20 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

’கவலையாக இருக்கிறது, கடந்த வாரம் தான் மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தேன். இப்போது அப்ரூவல் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம். இதனால் நான் கல்லூரியில் சேர தாமதம் ஆகலாம். இந்தத் படிப்புக்காக ஒரு வருடக் கட்டணத்தையும் GIC (உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்) கட்டணத்தையும் நான் ஏற்கனவே செலுத்திவிட்டேன். தூதரக சேவைகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை பல்கலைக்கழகத்தில் இருந்து எந்த அழைப்பும் இல்லை, என்று ராம்குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

பெங்களூருவில் வசிக்கும் பவன் ஹனுமந்தப்பா (32), கனடா மேற்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று, தனது மனைவியுடன் கனடாவுக்கு இடம் மாற விரும்பினார். இப்போது தான் ஏற்கெனவே வாங்கிய கல்விக் கடனைப் பற்றியும் கவலைப்படுகிறார்.

இப்போதைக்கு, நான் காத்திருக்கிறேன். கனடாவின் புலம்பெயர்ந்தோருக்கான நட்புக் கொள்கைகளின் அடிப்படையில், வேறொரு நாட்டைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் என்னிடம் இல்லை. இருப்பினும், எனக்கு கவலையாக இருப்பது, நான் வாங்கிய கல்விக் கடன் தான்.

இரண்டு வருட கடன் காலத்தின் முடிவில், நான் பட்டதாரியாக இருக்க வேண்டும், வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். விசா அனுமதியில் தாமதம் ஏற்பட்டால், சேர்க்கை தாமதமானால், நான் மாணவனாக இருக்கும்போதே எனது கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். இந்த கடனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வட்டி இல்லை.

காலதாமதங்கள் இப்போது உறுதியாகிவிட்டதால், ஆலோசகர்களும் முகவர்களும் ஜனவரியில் புறப்படத் தயாராகும் மாணவர்களை விரைவில் விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.

தாமதமின்றி விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். ராஜதந்திர பதட்டங்கள் முதலில் தோன்றியதிலிருந்து கனட மாணவர் விசா அனுமதிக்கான வெற்றி விகிதம் மாறவில்லை என்று அவர்களிடம் கூறி அவர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

10 நாட்களுக்கு பதிலாக இப்போது விசா பிராசஸிங் ஆக 30 முதல் 45 நாட்கள் ஆகலாம், மேலும் அவர்கள் முன்கூட்டியே (விசாவிற்கு) விண்ணப்பிப்பதன் மூலம் சிறப்பாக தயாராகலாம்  என்று ஜலந்தரை தளமாகக் கொண்ட ஆலோசகர் தீரத் சிங் கூறினார்.

பல கன பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் தங்கள் கல்வித் திட்டத்தின் முதல் நாளில் இருக்க வேண்டும். விசா தாமதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், சில மாணவர்கள் தங்கள் சேர்க்கையை மே அல்லது செப்டம்பருக்கு ஒத்திவைக்கலாம், என்று பெங்களூரில் உள்ள குரோயஸ் குடியேற்றத்தின் இணை மேலாளர் கிருத்திகா கூறினார்.

Ontarioவில் உள்ள செனிகா கல்லூரியில் அனுமதி பெற்ற நந்தினி ஷா, பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து கனடா செல்லும் திட்டத்தை கைவிட்டுள்ளார்.

கனடாவில் முதுகலைப் படிக்க வேண்டும் என்பது நான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த கனவு... தேவையான அனைத்து கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்திருந்தேன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களால் இந்திய மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கும் வரை அனைத்தும் நிறைவேறியதாகத் தோன்றியது.

பணவீக்கம் மற்றும் வீட்டு நெருக்கடி தொடர்பாக பல இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு மாணவியாக இருந்ததால், எனது பெற்றோர் பயந்தார்கள், மேலும் என்னை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்தனர். முதல் நாளிலிருந்தே கனடா செல்வது எனது திட்டமாக இருந்தது, அதற்காக நிறைய பணம் செலவழிக்கப்பட்டது, ஆனால் இறுதியில் அது பலனளிக்கவில்லை, என்று கூறினார்.

Read in English: Visa delay likely, shadow on winter enrolment plans of Canada-bound students

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment