Advertisment

10-ம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு பகுதி நீக்கம்

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

author-image
WebDesk
Jun 07, 2023 20:39 IST
exam

10 ஆம் வகுப்பு

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: JoSAA Counselling 2023: ஐ.ஐ.டி, என்.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் அட்டவணை வெளியீடு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்துள்ளது. இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான பாடப் பகுதிகள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. சீட்டுக்கட்டு தொடர்பான 5 கேள்விகள் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த 5 கேள்விகளும் முழுமையாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகத்தில் இந்த புதிய பகுதி அமலுக்கு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#School #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment