scorecardresearch

ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் படிப்பு; 100% உதவித்தொகை வழங்கும் கார்கில் நிறுவனம்

கார்கில் உதவித்தொகை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸில் சேருவதற்கான அவர்களின் லட்சியத்தைத் தொடர அனுமதிக்கும்

ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் படிப்பு; 100% உதவித்தொகை வழங்கும் கார்கில் நிறுவனம்
மெரிட்-கம்-மீன்ஸ் ஸ்காலர்ஷிப் தகுதி அளவுகோலின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

கார்கில் ஸ்காலர்ஷிப்: இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), மெட்ராஸ் மாணவர்கள் இப்போது தரவு அறிவியல் பயன்பாடுகளில் BS படிப்பைத் தொடர முழு உதவித்தொகையைப் பெற முடியும். அமெரிக்க-உலகளாவிய உணவு மற்றும் விவசாய நிறுவனமான கார்கில் உடன் இணைந்து இந்த உதவித்தொகை தொடங்கப்பட்டுள்ளது.

மெரிட்-கம்-மீன்ஸ் ஸ்காலர்ஷிப் தகுதி அளவுகோலின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 7,500 புதிய மாணவர்கள் இந்தப் படிப்பில் கலந்து கொள்கின்றனர், அவர்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கார்கில் உதவித்தொகை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸில் சேருவதற்கான அவர்களின் லட்சியத்தைத் தொடர அனுமதிக்கும்.

இதையும் படியுங்கள்: திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐ.ஐ.டி மெட்ராஸ் BS இன் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் திட்டத்தை ஜூன் 2020 இல் அறிமுகப்படுத்தியது. ஆறு கல்விக் காலங்களுக்குப் பிறகு, இந்தப் படிப்பு மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. சிறந்த ஆன்லைன் திட்டத்திற்கான QS-Wharton Reimagine Education விருதில் இந்தப் படிப்பு வெள்ளி பரிசை வென்றுள்ளது.

இதுவரை, 22,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடத்தில் தகுதி பெற்றுள்ளனர், தற்போது 17,000 க்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர். 195 மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடரும் அதே வேளையில், 4,500 க்கும் மேற்பட்டவர்கள் டிப்ளமோவைத் தொடர்கின்றனர்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் பி.எஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பு என்பது ஒரு வகையான திட்டமாகும், இது மாணவர்களுக்கு பல நுழைவு மற்றும் வெளியேறும் தேர்வுகளை வழங்குகிறது, இது ஒரு சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டத்துடன் வெளியேற அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தில் நான்கு நிலைகள் உள்ளன, மேலும் ஒரு மாணவர் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகளில் BS பட்டம் பெற நான்கு நிலைகளையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Cargill announces scholarship for iit madras bs degree students

Best of Express