மிகவும் பிரபல பிசினஸ் பள்ளிகளாக கருதப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) இந்திய வெளிநாட்டு வர்த்தக கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்திற்கு காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட் /CAT )தேர்வின் மூலமாகவும், இந்திய வெளிநாட்டு வர்த்தக கழகத்திற்கு ஐஐஎப்டி எம்பிஏ தேர்வின் மூலமாகவும் தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். கேட் தேர்வு இந்த மாதம் 24 ம் தேதியும், ஐஐஎப்டி எம்பிஏ 2020 தேர்வு வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியும் தொடங்குகிறது.
எனவே, இந்த தேர்வுகளுக்கான அடிப்படை ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் இங்கே காணலாம்.
யாரால் நடத்தப்படுகிறது:
கேட் தேர்வு – ஐஐஎம் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இணையதளம் – iimcat.ac.in
ஐஐஎப்டி எம்பிஏ 2020 தேர்வு – தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. இணையதளம் – iift.nta.nic.in
கேள்விகளில் உள்ள வித்தியாசம்:
இரண்டு நுழைவுத் தேர்வுகளிலும் அதிகாரப்பூர்வமாக எத்தனை கேள்விகள் என்று முன்னேரே வெளியிடப்படாது. இருந்தாலும், கடந்த ஆண்டில், கேட் தேர்வில் மூன்று மணிநேரத்தில் மாணவர்கள் 100 கேள்விகளை கடந்து வர வேண்டும். ஐஐஎப்டி எம்பிஏ தேர்வில் இரண்டு மணிநேரங்களில் 114 கேள்விகளை கடந்து வரவேண்டும் (அதாவது, ஒரு நிமிடத்திற்கு ஒரு கேள்வி என்கிற விதம்)
எனவே, கேட் தேர்வில் மாணவர்களின் கருத்தாய்வை சோதனை செய்யும் விதமாகவும், ஐஐஎப்டி எம்பிஏ தேர்வில் மாணவர்களின் வேகத்தை சோதிக்கும் வகையில் இருக்கும்.
மேலும், கேட் தேர்வில் கேட்கப்படும் அனைத்தும் மல்டிபல் சாய்ஸ் கேள்விகளாக மட்டும் இருக்கும். ஆனால், ஐஐஎப்டி எம்பிஏ தேர்வில் மல்டிபல் சாய்ஸ் கேள்விகளைத் தாண்டி, சில கேள்விகளுக்கு கணினி கீபோர்டு மூலம் பதிலையும் எழுத வேண்டும் .
தேர்வுகளுக்கு பிறகு :
கேட் தேர்வின் மூலம் நாட்டில் உள்ள 20 ஐஐஎம் பிசினஸ் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இதைத்தவிர, நாட்டிலுள்ள 200 பி-பள்ளிகள் இந்த கேட் தேர்வை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், ஐஐஎப்டி எம்பிஏ தேர்வின் மூலம் கொல்கத்தாவில் இருக்கும் இந்திய வெளிநாட்டு வர்த்தக கழகம் நடத்தும் எம்பிஏ படிப்பில் சேர முடியும்.
இதனால், கேட்தேர்வில் மட்டும் கடுமையான போட்டி நிலவும் என்ற நமது கருத்து தவறானதோ என்றே தோன்றுகிறது.