Advertisment

CBSE மாணவர்களுக்கு தித்திப்பான செய்தி.. 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து

CBSE Exams canceled: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse latest news,cbse tamil news, cbse exams canceled, cbse exam, cbse news, cisce, cbse exam cancel, சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு ரத்து, சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் ரத்து, no cbse exam this year news, icse, isc, cbse pending exams, cbse exams cancelled, cbse.nic.in, education news

cbse latest news,cbse tamil news, cbse exams canceled, cbse exam, cbse news, cisce, cbse exam cancel, சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ தேர்வு, சிபிஎஸ்இ தேர்வு ரத்து, சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் ரத்து, no cbse exam this year news, icse, isc, cbse pending exams, cbse exams cancelled, cbse.nic.in, education news

CBSE Board Class 10th, 12th Exam 2020: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.

இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

சிபிஎஸ்இ தேர்வுகள்

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் ஊரடங்கால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம், ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எங்களிடம் தெரிவித்துள்ளன. அது போல் மற்ற மாநில அரசுகளிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய முடிவு செய்யப்படுகிறது என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயம், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்படுவார்கள், இதில் கடந்த மூன்று பள்ளித் தேர்வுகளில் அவர்களின் செயல்திறன் (தேர்வு மதிப்பெண்கள்) பரிசீலிக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கடைசி மூன்று தேர்வுகளின் மதிப்பெண் முடிவுகளில், அதிருப்தி அடையாத மாணவர்கள் தேர்வு எழுதலாம், இது ஆண்டின் பிற்பகுதியில் வாரியத்தால் நடத்தப்படும். இருப்பினும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆப்ஷன் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ இது குறித்து முறையான அறிவிப்பை வெள்ளிக்கிழமைக்குள் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment