Advertisment

சிபிஎஸ்இ +2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இப்படி செக் பண்ணுங்க!

CBSE Result 2022, CBSE 10th Result 2022, CBSE 12th Result 2022, CBSE Class 10th, 12th Result 2022 tamil news: மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
CBSE 10th 12th Result 2022 latest news updates in tamil

CBSE Class 10th, 12th Result 2022

CBSE 10th 12th Result 2022 Tamil News: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisment

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்:

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட நிலையில், பிளஸ்-2 தேர்வை எழுதிய 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பிளஸ்-2 தேர்வை 14,35,366 எழுதிய மாணவர்களில் 13,30,662 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 98.83% பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும்

அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் இந்த மாற்று முறைகளில் இருந்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும் -- cbse.gov.in, cbseresults.nic.in
CBSE வகுப்பு 10, 12 முடிவுகள் 2022 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ரோல் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
CBSE 2022 முடிவைச் சமர்ப்பித்து பதிவிறக்கவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Exam Result Education Educational News Cbse Exams Education Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment