கரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது. முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், 2-ம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என்றும் கூறியிருந்தது.
அதன்படி, 10-ம் வகுப்புத்தேர்வு நவ.30 தொடங்கி டிச.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் பருவ தேர்வு முறையானது அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டை இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நுழைவு சீட்டை மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் cbse.gov.in -க்குச் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்து வழங்கும். மாணவர்கள் அதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதலாக, தேர்வு வழிகாட்டுதல்கள், தேர்வு மையத்தில் விரிவான செயல்முறைகள் போன்றவற்றையும் சிபிஎஸ்இ வெளியீடும்.
நுழைவுச் சீட்டில் தேர்வு நேரம், மைய விவரங்கள், ரோல் எண் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். தேர்வர்கள் நிச்சயமாக இதனை மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த சீட்டை ஏ4 தாளில் டவுன்லோடு செய்து ஹார்ட் காப்பியாக தான் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்மிட் கார்ட் டவுன்லோடு செய்யும் வழிமுறை
- முதலில் cbse.gov.in பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், ஹோம்பேஜ்ஜில் e-pareeksha லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, லாகின் கிளிக் செய்யுங்கள்
- அதில், கேட்கும் தகவல்களை பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும்.
- திரையில் தோன்றும் அட்மிட் கார்ட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு
CBSE 10ஆம் வகுப்பில் மொத்தம் 75 பாடங்களையும், 12ஆம் வகுப்பில் 114 பாடங்களையும் வழங்குகிறது. இந்தப் பாடங்கள் அனைத்துக்கும் தேர்வு வைக்க வேண்டுமானால், 45 முதல் 50 நாட்கள் ஆகும். எனவே, நேர விரயத்தைத் தடுக்க, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தான் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 7,000லிருந்து 14,000 ஆகவும் வாரியம் உயர்த்தியுள்ளது. அறிக்கைகளின்படி, 10 ஆம் வகுப்புக்கான பருவ 1 தேர்வை சுமார் 22 லட்சம் பேர் எழுதுவார்கள் என்றும், 12 ஆம் வகுப்புத் தேர்வை 14 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil