சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று ( மே 2ம் தேதி ) வெளியான நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இவ்வாரத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் 5ம் தேதி வெளியாக இருப்பதாக, சிபிஎஸ்இ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை results.nic.in, cbseresults.nic.in மற்றும் cbse.nic.in இணையதளங்களில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளங்களின் சேவை பெறமுடியாதபட்சத்தில், bing.com இணையதளத்தில் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் பெரும்பாலும் மே இறுதி வாரத்திலேயே வெளியாகி வந்தநிலையில், இம்முறை, மே முதல் வாரத்திலேயே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. அதோடு நின்றுவிடாமல், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் அதேவாரத்தில் வெளியிடும் நடவடிக்கைகளில் சிபிஎஸ்இ களமிறங்கியுள்ளது.
சிபிஎஸ்இ, கூகுளுடன் இணைந்து தேர்வுமுடிவுகளை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ரிசல்ட் லிங்க் ஆக்டிவேட் ஆனபிறகு, google.co.in தளத்திலேயே, மாணவர்கள், ரிசல்ட் மற்றும் மார்க் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து 10ம் வகுப்பு ரிசல்ட்டை, மாணவர்கள் app மூலம் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பிளே ஸ்டோரில் சென்று இந்த APP யை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து தங்களது பதிவு எண், ஸ்கூல் கோட், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு, தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
போன் மூலமாகவும் ரிசல்ட்
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை, போன் மூலமாகவும் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள மாணவர்கள், 24300699 என்ற எண்ணிலும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.