சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து

இன்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளில் ஏ பிரிவு கேள்விகள் சிறிது கடினமாக இருந்தது என்றும் பி பிரிவு வினாக்கள் கடினமாக இருந்தது என்றும் சி…

By: Updated: March 5, 2020, 01:00:20 PM

CBSE 10th Exam: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2020 மார்ச் 4 புதன்கிழமை நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அறிவியல் பாட தேர்வை நடத்தியது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது மூன்றாவது முக்கிய பாடத் தேர்வு ஆகும். சிபிஎஸ்இ வாரியம் முன்னதாக பிப்ரவரி 26, பிப்ரவரி 29 ஆகிய தேதிகளில் 10-ம் வகுப்பு ஆங்கிலம், இந்தி பாட தேர்வுகளை நடத்தியது.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…

இதற்கு அடுத்து முக்கிய பாடங்களான கணித தேர்வு மார்ச் 12-ம் தேதியும் சமூக அறிவியல் தேர்வு மார்ச் 18 ஆகிய தேதியும் நடைபெற உள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாதாள் கேட்கப்பட்ட முறை

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு உள் விருப்பத் தேர்வு வழங்கப்பட்டது. அறிவியல் வினாத்தாளில் 80 மதிப்பெண்களுக்கு மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு நேரம் மூன்று மணி நேரமாக இருந்தது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது?

10-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சுமார் 19 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7,88,195 மாணவிகள், 11,01,664 மாணவர்கள், 19 திருநங்கைகள் அடங்குவர்.

இன்று நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளில் ஏ பிரிவு கேள்விகள் சிறிது கடினமாக இருந்தது என்றும் பி பிரிவு வினாக்கள் கடினமாக இருந்தது என்றும் சி பிரிவு வினாக்கள் கடினமாக இருந்தது என்றும் சில மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில மாணவர்கள், தேர்வில் வரைபட அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது என்றும் சராசரி மாணவர்கள்கூட 60-70 சதவீத மதிப்பெண்கள் எடுப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து:

ஹைதராபாத்தில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு பற்றி கூறுகையில், எனக்கு 3 செட்களும் கடினமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை பிரிவு சி எளிதாக இருந்தது. ஆனால், 3 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. சில கேள்விகள் குழப்பமாக இருந்ததால் அது எனக்கு புரியவில்லை. எனது விடைத்தாளை என்னால் முடிக்க முடிந்தது. ஆனால், திரும்ப சரிபார்க்க முடியவில்லை. மொத்தமாக சொல்லப்போனால் இந்த தேர்வு சராசரி தேர்வாகத்தான் இருந்தது என்று கூறினார்.

சுனில் யாதவ், நாக்பூரில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டபோது, “இந்த தேர்வு எளிதாக இருந்தது. ஆனால், உயிரியல் பிரிவில் வந்த கேள்விகள் கொஞ்சம் கடினமாக இருந்தது. வேதியியல் பாட கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாகவும் நிளமாகவும் இருந்தது” என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியங்கா பாண்டே, அறிவியல் தேர்வு பற்றி கூறுகையில், “அறிவியல் தேர்வும் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால், கேள்விகள் கொஞ்சம் சுற்றி வளைத்து குழப்பமாக கேட்கப்பட்டிருந்தது. ஆனாலும், நான் தேர்வு நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னாடியே தேர்வு எழுதி முடித்துவிட்டேன்.” என்று கூறினார்.

ரம்யா டெல்லி மாணவி, (அறிவியல் தேர்வு எனக்கு ரொம்ப கடினமாக இருந்தது. சில கேள்விகள் எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனாலும், நான் பாஸாகி நல்ல மார்க் எடுப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

பிரியதர்ஷினி நாக்பூரைச் செர்ந்த இந்த மாணவி, “10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எதிர்பார்த்ததைவிட எனக்கு எளிதாக இருந்தது. எல்லா கேள்விகளும் படப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாள் நல்லா வடிவமைக்கப்பட்டிருந்தது. எந்த தவறும் இல்லை. அதனால், நான் நல்ல மார்க்ஸ் எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி 10-ம் வகுப்பு மாணவி, ஹஸ்ரத் பேகம், “அறிவியல் தேர்வு ரொம்ப நல்லா இருந்தது. ஏ பிரிவில் கேள்வி எல்லாம் ரொம்ப எளிதாக இருந்தது. ஆனால், பி பிரிவில் 3 மார்க் கேள்விகள் கடினமாக இருந்தது. மொத்தமா சொல்லப்போனால், அறிவியல் தேர்வு நல்லா இருந்தது. சரியான நேரத்தில் எல்லா விடைகளையும் எழுதி முடித்துவிட்டேன். அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா மாணவர் விக்னேஷ் கூறுகையில், “அறிவியல் தேர்வு என்னைப் பொறுத்தவரை ஓரளவு கடினமாக இருந்தது. ஹர்ஷ்வெர்தன், கல்கா பப்ளிக் பள்ளி, புது தில்லி: என்னைப் பொறுத்தவரை தாள் மிதமாக கடினமாக இருந்தது. நான் தேர்வுக்கு நல்லா தயார் செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல், வினாத்தாளில் வந்த பெரும்பாலான கேள்விகள் பாடத்திட்டங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்தது.” என்று தெரிவித்தார்.

பெங்களுருவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய டேவிட் ராஜ் என்ற மாணவர் கூறுகையில், “அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால், கேள்விகள் நீளமாக இருந்தது. அதே நேரத்தில் மொழி சௌகரியமாகவும் இருந்தது. ஆனால் பல துணை கேள்விகள் இருந்தன. அவை எல்லாம் தீர்க்க நீண்ட நேரம் பிடிக்கும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Cbse class 10th exam how is science exam students feedback

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X