CBSE Board 10th Result Update: இந்தாண்டின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் பொதுத்தேர்வில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் பெயர் மற்றும் ரோல் எண்ணை உள்ளிட்டு, cbse.gov.in, results.nic.in, results.digilocker.gov.in, umang.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்ணைப் பார்க்கலாம்.
CBSE 10ஆம் வகுப்பு முடிவை, இணையதளங்கள் மூலம் மதிப்பெண்களை எப்படிச் சரிபார்ப்பது:
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - cbseresults.nic.in.
- முகப்புப்பக்கத்தில் '10 ஆம் வகுப்பு ரிசல்ட்', கிளிக் செய்யவும்.
- பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- தங்களது மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்
- எதிர்கால பயன்பாட்டிற்காக முடிவைப் பதிவிறக்கி வைக்கலாம்.
உமாங் செயலி மூலம் CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் பார்க்கும் முறை:
- மாணவர் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், 'பிளே ஸ்டோரையும்' அல்லது மாணவர் iOS பயனராக இருந்தால் 'ஆப் ஸ்டோரையும்' பார்வையிட்டு, செயலியை பதிவிறக்க வேண்டும்.
- சேவைகள் பிரிவுக்குச் சென்று சி.பி.எஸ்.,இக்குச் செல்லவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP அல்லது MPIN மூலம் உள்நுழையவும்.
- பதிவு எண் அல்லது ரோல் எண் போன்ற உங்களுக்கு தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்காக முடிவைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு 21.8 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil