Advertisment

CBSE 10th Result 2019: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது! 499 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை!

CBSE Class 10th Result 2019: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE MERIT SCHOLARSHIP SCHEME FOR SINGLE GIRL CHILD

CBSE MERIT SCHOLARSHIP SCHEME FOR SINGLE GIRL CHILD

CBSE Class 10th Result 2019 @cbseresults.nic.in: சென்ட்ரல் போர்டு ஆஃப் செகண்ட்ரி எஜுகேஷன் எனப்படும் சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(மே.6) பிற்பகல் வெளியானது.

Advertisment

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளை results.nic.incbseresults.nic.in மற்றும் cbse.nic.in. ஆகிய தளங்களில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க - CBSE 10th Result 2019: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா?

Live Blog

CBSE 10th Result 2019: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது














Highlights

    16:26 (IST)06 May 2019

    CBSE 10th Result 2019 Toppers: சிபிஎஸ்இ 10 வகுப்பு டாப்பர்ஸ்களை சந்திக்கணுமா?

    publive-image

    15:58 (IST)06 May 2019

    95%க்கு மேல் எத்தனை பேர் தெரியுமா?

    நடப்பாண்டில் 2,25,143 தேர்வர்கள் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 57,256 தேர்வர்கள் 95 சதவிகிதத்துக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

    15:53 (IST)06 May 2019

    மத்திய அமைச்சர் வாழ்த்து

    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில், சிபிஎஸ்இ 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

    15:48 (IST)06 May 2019

    CBSE 10th Result 2019 Toppers: இந்திய அளவில் முதலிடம் பிடித்தது யார்?

    பதிண்டாவைச் சேர்ந்த மான்யா மற்றும் அம்பாலாவை சேர்ந்த திவ்ஜோத் கவுர் ஜக்கி ஆகியோர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.இருவரும் தலா 99.8 சதவிகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

    15:18 (IST)06 May 2019

    மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியின் மகள் ஸ்கோர் என்ன தெரியுமா?

    மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியின் மகள், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 82% பெற்றுள்ளார். 

    15:12 (IST)06 May 2019

    CBSE 10th Result 2019: தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 மாவட்டங்கள்

    திருவனந்தபுரம் - 99.852, சென்னை - 99, அஜ்மர் - 95.894, பன்ச்குலா - 93.725, பிரயக்ராஜ் - 92.556, புவனேஸ்வர் - 92.327, பாட்னா - 91.868, டேஹ்ராடூன் - 89.049, டெல்லி - 80.9710, குவஹாத்தி - 74.49

    15:08 (IST)06 May 2019

    CBSE class 10 result 2019: ரிசல்ட்டில் திருப்தி இல்லையா? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

    சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் உங்களுக்கு திருப்தி இல்லை எனில், மறு கூட்டலுக்கு cbse.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 24 2019 முதல் மே 25 2019 மாலை 5 மணி வரை, ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.100 கட்டணம் செலுத்தி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

    15:03 (IST)06 May 2019

    CBSE class 10 mark sheets to be available at digilocker.gov.in: மார்க் ஷீட் இங்கே

    10ம் வகுப்பு தேர்வு முடிவின் மார்க் ஷீட்ஸ், மைக்ரேஷன் செர்டிபிகேட் மற்றும் தேர்ச்சி ஆவணம் ஆகியவற்றை http://digilocker.gov.in மூலம் சிபிஎஸ்இ வழங்குகிறது.

    14:52 (IST)06 May 2019

    வெற்றி சதவிகிதம் 5% உயர்வு

    இந்த வருடம் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ ரிசல்ட்டில் வெற்றி சதவிகிதம் 91.1%. இது கடந்த ஆண்டை விட 5% உயர்வு தான். இருப்பினும், 2017ல் வெற்றி சதவிகிதம் 93.06% ஆகும். அதனை விட, இந்தாண்டு வெற்றி விகிதம் குறைவே.

    14:48 (IST)06 May 2019

    Check Your CBSE 10th Result 2019: உங்கள் ரிசல்ட் இங்கே...

    14:39 (IST)06 May 2019

    How to Check CBSE 10th Result? உங்கள் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

    ஸ்டெப் 1 - cbseresults.nic.in or cbse.nic.in ஆகிய தளங்களில் ஏதேனும் ஒன்றிற்கு செல்லவும்.

    ஸ்டெப் 2 - ஹோம் பேஜில் 'Class 10 Result 2019' என்பதை க்ளிக் செய்யவும்

    ஸ்டெப் 3 - உங்கள் ரெஜிஸ்டர் எண் அல்லது ரோல் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து, Submit கொடுக்கவும்

    ஸ்டெப் 4 - திரையில் உங்கள் ரிசல்ட் தெரியும். எதிர்கால தேவைகளுக்கு அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    14:19 (IST)06 May 2019

    CBSE 10th Result: 3 மணிக்கு ரெடியா இருங்க...

    சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Cbse
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment