மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று (மே 13) 2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மதிப்பெண் அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
சி.பி.எஸ்.இ மதிப்பெண் அட்டைகளை சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் உள்நுழைவு சாளரத்தில் தங்கள் பதிவு எண்/ ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட வேண்டும்.
சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைப்பு பின்வரும் இணைப்புகளில் கிடைக்கும்.
- cbse.gov.in
- cbseresults.nic.in
– results.digilocker.gov.in
– umang.gov.in
2024 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 93.60 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு 93.12 சதவீதத்தில் இருந்து 0.48 சதவீதம் அதிகமாகும்.
மண்டல வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் 99.75%, விஜயவாடா 99.6%, சென்னை 99.3% ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இம்முறை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு கோரீன் பள்ளிகளில் மொத்தம் 27761 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர், அவர்களில் 27652 பேர் தேர்வெழுதி 27267 பேர் (98.61%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாலினம் வாரியாக, ஆண்களை விட பெண்கள் 2.04% சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இம்முறை, 2023ல் 94.25 சதவீதமாக இருந்த பெண் குழந்தைகளின் தேர்ச்சி சதவீதம் 2024ல் 94.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்களுக்கான தேர்ச்சி சதவீதம் 2023ல் 92.27 சதவீதத்தில் இருந்து 2024ல் 92.71 சதவீதமாக அதிகரித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 90% இருந்த நிலையில் இந்த ஆண்டு 91.30% ஆக அதிகரித்துள்ளது.
நிறுவன வாரியாக, JNV மற்றும் KV கள் 99.09%, தனிப் பள்ளிகள் 94.54%, CTSA 94.40%, அரசுப் பள்ளிகள் 86.72% மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 83.95% எனச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடத்தியது. சி.பி.எஸ்.இ தேர்வுகள் 26 நாடுகளில் நடத்தப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“