பிளஸ் 2 தேர்வுடன் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தயாராக முடியுமா?

ஏப்ரல் மாதம் நடக்கும் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ளன. இந்த நேரத்தில் மாணவர்கள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய...

ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (ஜேஇஇ முதன்மை ஏப்ரல் மாத தேர்வுக்கு இன்னும் ஐந்து வாரங்கள் தான் உள்ளன. இந்த நேரத்தில் தான் மாணவர்கள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுக்கும் தயாராவார்கள். எனவே ஜேஇஇ, 12ம் வகுப்பு  என்ற இரண்டு தேர்விலும் வெற்றி பெற, நன்கு ஒருங்கிணைந்த மற்றும் செயல்படக்கூடிய திட்டத்தை மாணவர்கள் தயாரிப்பது கட்டாயமாகும். அவர்களுக்கான சில குறிப்புகள் இங்கே:

வாரியத் தேர்வுகளை ஒரு ரிவிசனாக  கருதுங்கள்: ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஒட்டுமொத்த பாடத்திட்டங்களுக்கு சமம். எனவே  12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுக்கு தயாராகும் போது, ​​மாணவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டங்களை நன்றாக ரிவிசன் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், 11 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம்  அளிக்காமல் புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டும் . தற்போது கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களைப்   பயன்படுத்துங்கள். நீங்கள் படித்த அத்தியாயத்திலிருந்து எந்தவொரு கேள்வியையும் தீர்ப்பதில் 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் ஆசிரியருடன் இணைத்து சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள்.

உங்கள் சந்தேகங்களைப் பயிற்சி செய்யுங்கள்: உங்கள் சந்தேகங்களை நீங்கள் சரிசெய்தவுடன், நீங்கள் ரிவிசன் செய்த அத்தியாயத்திலிருக்கும் கேள்விகளைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள். கேள்விகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்யுங்கள். தீர்க்க முடியாவிட்டால், உங்கள் ஆசிரியருடன் விவாதிக்கவும். கடந்த ஒரு வருடத்தில் எந்தவொரு குறிப்பிட்ட வகை கேள்வியையும் தீர்ப்பதில் நீங்கள் சிரமத்தை சந்தித்திருந்தால், இப்போது அதைப் பயிற்சி செய்யுங்கள்.

 

முந்தைய ஆண்டு வினாத்தாள்: முந்தைய ஆண்டு வினாத் தாள்களை புரட்டி பார்ப்பது  மனதளவில் உங்களுக்கு தைரியத்தை உருவாக்கும். ஜேஇஇ முதன்மை தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) என்பதால் அதற்கேற்றார் போல் தயாராக வேண்டும். ஆன்லைனில் இலவச மாக் டெஸ்ட்டுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் பரிச்சயம் பெறுவது மிக முக்கியமானதாகும்.  ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ஜே இஇ முதன்மை தேர்வு வினாத் தாள்களில் என்ன எதிர்பார்க்கலாம்? என்பதைப் புரிந்துகொள்ள ஜனவரி 2020 பதிப்பின் JEE முதன்மை வினாத்தாளை நோட்டமிடுங்கள் .

மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு: ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு மாக் டெஸ்ட்டை முயற்சி செய்வது நல்லது. இது உங்களை மதிப்பிடுவதற்கும், பலவீனமான பகுதிகளைக் கண்டறிவதற்கும், தேர்வின் போது நேரத்தை திறம்பட நிர்வகிக்க கற்றுக்கொள்வதற்கும், வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். தேசிய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் மாக் டெஸ்ட்டுகளை எழுதுங்கள்.

தேர்வின் போது :  தேர்வைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவைக் புரிந்து கொள்ள தேர்வு வினாத்தாள் மற்றும் வழிமுறைகளை முழுமையாகப் படியுங்கள். நீங்கள் எல்லா கேள்விகளையும் முயற்சிக்க வேண்டியதில்லை. உறுதியாக நம்பும் கேள்விகளுக்கு முதலில் பதில் அளியுங்கள். ஒரு கேள்வியைத் தீர்க்கும்போது நீங்கள் சிக்கிக்கொண்டால், அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள், இதன்மூலம் புதிய மனதுடன் கேள்வியை மீண்டும் பார்வையிடலாம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

மன அழுத்த அளவை சரிபார்க்கவும்:  சில சிக்கலான கேள்விகளும், தேர்வு அறைகளும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, அதிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளானாலும், சிறிது தண்ணீர் எடுத்து, சில ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்கிடையில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒருகிணைந்த முதன்மை நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) தேதிகளை மாற்றியுள்ளது. முன்னதாக ஏப்ரல் 3 முதல் 9 வரை நடத்த திட்டமிடப்பட்ட தேர்வு,  ஏப்ரல் 5, 7, 9, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close