Advertisment

CBSE 12th Result: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு ரிசல்ட் அறிவிப்பு; தேர்ச்சி விகிதம் சரிவு

CBSE Result 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 12 ஆம் வகுப்பு முடிவுகளை 2023 அறிவித்தது. கிட்டத்தட்ட 16.9 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE 12th Result Updates in Tamil

சி.பி.எஸ்.சி., 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவுகள்

CBSE Board 12th Result Update: 2023ஆம் ஆண்டின் சி.பி.எஸ்.இ., 12 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் bse.gov.in, cbseresults.nic.in அல்லது results.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது மதிப்பெண்ணை சரிபார்க்கலாம்.

Advertisment

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 12 ஆம் வகுப்பு முடிவுகளை 2023 அறிவித்தது. கிட்டத்தட்ட 16.9 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

சி.பி.எஸ்.சி., 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தப்பட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in, cbseresults.nic.in அல்லது results.nic.in இல் (அல்லது UMANG ஆப், டிஜிலாக்கரிலும்) முடிவுகளைப் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., இரண்டு முறை தேர்வுகளை நடத்தியது - முதல் பருவம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது; இரண்டாவது பருவம் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்றது.

மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, ஜூலை 30 அன்று அறிவிக்கப்பட்ட வாரிய முடிவுகளைத் தயாரிக்க 13 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education News Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment