CBSE 12th Exam 2019, Students Allowed with Uniform Only: சி.பி.எஸ்.இ பாட திட்டத்தில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து (இன்று) தேர்வுகள் தொடங்குகின்றன. இதில் தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் லேசான உடையை தான் உடுத்த வேண்டும் எனவும், மற்ற மாணவர்கள் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சி.பி.எஸ்.இ செய்தித் தொடர்பாளர் ரமா சர்மா, ”தனித்தேர்வு எழுதும் மாணவர்கள், லேசான உடைகளுடன் வந்தால் தான் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். காப்பியடிப்பதைத் தடுப்பதற்காக நிறைய முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தவிர ரெகுலர் மாணவர்கள் அந்தந்த பள்ளியின் யூனிஃபார்மில் தான் கட்டாயம் தேர்வெழுத வர வேண்டும். மற்ற விஷயங்கள் அவர்களது ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்றார்.
அதோடு பழைய கேள்வி தாள்களை மாணவர்களோ அவர்களது பெற்றோர்களோ எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ’எக்ஸாம் சென்டர் லொகேட்டர்’ ஆப்பைப் பயன்படுத்தி தேர்வு மையத்தை கண்டறிந்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர மாணவர்கள் அனைவரும் சரியாக காலை 10 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிப்போர்ட்டிங் டைம் - 10 மணிக்கு முன்பாக தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும்.
ஹால் டிக்கெட் - கட்டாயமாக அடையாள அட்டையுடன் தான் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். அது இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சீட் - ஒவ்வொரு தேர்வறையிலும் 24 மாணவர்களுக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தலின் படி, அவர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும்.
கேள்வித்தாள் - பழைய வினாத்தாள்களை தேர்வு மைய வளாகத்துக்குள் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.