CBSE 12th Result Declared: கொரோனா பொது முடக்கநிலையால் நிலுவையில் உள்ள தேர்வுகள் நடத்தப்படாத சூழலில்,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ வாரியம் தற்போது வெளியிட்டது.
Dear Students, Parents and Teachers!@cbseindia29 has announced the results of Class XII and can be accessed at https://t.co/kCxMPkzfEf.
We congratulate you all for making this possible. I reiterate, Student's health & quality education are our priority.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020
http://cbseresults.nic.in என்றஇணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
CBSE Class 12th result 2020 declared at cbseresults.nic.in LIVE UPDATES
முன்னதாக, ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 (வடகிழக்கு டெல்லி மாணவர்களுக்கு மட்டும் ) மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்வதாக சி.பி.எஸ்.இ அறிவித்தது.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடு மதிப்பீடு, சிபிஎஸ்இ குழு பரிந்துரை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என அமைசச்சர் தெரிவித்தார்.
எனவே, மதிப்பீடு திட்டத்தின் (assessment scheme) அடிப்படையிலான தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 : மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்பட உள்ளன?
இன்றைய தேர்வு முடிவுகள் மூலம், மாணவர்கள் உயர் கல்வி மையங்களில் விண்ணப்பித்து சேர முடியும் என்பதை மத்திய அரசு ஏற்கனவே உறுதி படுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகளுக்கான பாடங்களுக்கு, சாதகமான சூழல் ஏற்பட்டதும், விருப்பத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பினால், பிந்தைய நாட்களில் சி.பி.எஸ்.இ நடத்த இருக்கும் விருப்பத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
ரிசல்ட் செக் செய்வது எப்படி?
ஸ்டெப் 1 - cbseresults.nic.in or cbse.nic.in ஆகிய தளங்களில் ஏதேனும் ஒன்றிற்கு செல்லவும்.
ஸ்டெப் 2 - ஹோம் பேஜில் 'Class 12 Result 2020' என்பதை க்ளிக் செய்யவும்
ஸ்டெப் 3 - உங்கள் ரெஜிஸ்டர் எண் அல்லது ரோல் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து, Submit கொடுக்கவும்
ஸ்டெப் 4 - திரையில் உங்கள் ரிசல்ட் தெரியும். எதிர்கால தேவைகளுக்கு அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.