மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மே 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் - cbseresults.nic.in மற்றும் cbse.gov.in தெரிந்துக் கொள்ளலாம். மற்றும் DigiLocker மற்றும் UMANG பயன்பாடு உள்ளிட்ட பிற டிஜிட்டல் தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு சதவீதம் 87.98% ஆகும், இது முந்தைய ஆண்டின் 87.33% ஐ விட 0.65 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு 90.68 ஆக இருந்த மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 91.52 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.12 சதவீதமாக உள்ளது. ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்க, தகுதிப் பட்டியல் எதுவும் அறிவிக்கப்படாது.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் 99.91 சதவீத தேர்ச்சியும், விஜயவாடா மற்றும் சென்னை முறையே 99.04 சதவீதமும், 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
நிறுவன வாரியாக CTSA 99.23 சதவீத மாணவர்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து JNV களில் இருந்து 98.90 சதவீதமும், KV களில் இருந்து 98.81 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் முறையே 91.42 சதவீதம் மற்றும் 88.23 சதவீதம். தனித்தேர்வுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.70.
அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ துணைத் தேர்வு ஜூலை 15 முதல் நடைபெறும். துணை மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்படும் மற்றும் மாணவர்களிடமிருந்து எந்த ஆஃப்லைன் விண்ணப்பத்தையும் வாரியம் ஏற்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“