மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் cbse.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ தேர்வு ஜூலை 15ஆம் தேதி நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க:
ரோல் எண், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐ.டி மற்றும் பாதுகாப்பு பின் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் முடிவுகளைச் சரிபார்க்கலாம்.
இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ துணை தேர்வு முடிவுகள் தேர்ச்சி சதவீதம் 29.78 ஆகும், இதில் பெண்கள் 5.57 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 27.90 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 33.47 சதவீதமாகவும் உள்ளது.
சி.பி.எஸ்.இ துணைத் தேர்வுக்கு 131396 பதிவு செய்த நிலையில், 127437 பேர் தேர்வு எழுதினர். இதில் 37957 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 29.78 ஆகும்.
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஒரே நாளில் ஜூலை 15 அன்று நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2024 ஜூலை 15 முதல் 22 வரை நடைபெற்றது. சி.பி.எஸ்.இ துணைத் தேர்வு 2023-24 அமர்வுக்கான வாரியத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2024 மே 13 அன்று வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ முடிவுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 93.60 சதவிகிதமாகவும் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 87.98 சதவிகிதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“