மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் முன் இந்த முக்கிய நிகழ்வுகளை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் பொதுத்தேர்வுகள் 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் துவங்குகின்றன. இந்த வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbse.nic.in/newsite/index.html வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிபிஎஸ்இ வகுத்துள்ள சில டிப்ஸ்கள்..
பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கும் நேரத்தை வடிவமைத்துக்கொள்ளவும். ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை தினமும் படிக்கும்படி அட்டவணையை தயாரித்துக்கொள்ளவும்.
ஒவ்வொரு பாடங்களை படித்து முடித்த பின்னரும்,குறைந்தது 10 நிமிட காலம் இடைவெளி எடுத்துக்கொள்ளவும். சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் அடுத்தே பாடத்தை படிக்கவும்.
CBSE Class 10 Board Examination 2020 Date Sheet
CBSE Class 12 Board Examination 2020 Date Sheet
ஏதாவதொரு பாடத்தில் கவனக்குறைவு ஏற்படுகிறது என்றால், அந்த பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு முறை படிக்க வேண்டும்,.
ஒவ்வொரு பாடத்தை துவக்குவதற்கு முன் என்ன செய்யப்போகிறோம் என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும். பிடித்தது, பிடிக்காதது என்ற இரு பிரிவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். முடித்த முடித்த பாடங்களை உடனுக்குடன் மார்க் செய்து கொண்டு மற்ற பாடங்களை தொடர வேண்டும்.
10, 12 சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை எப்போது ?
CBSE handbook : ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபர கையேடு – சிபிஎஸ்இ வெளியீடு
படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஓய்வு நேரங்களில் கீவேர்ட்ஸ், படித்த பாடத்திலிருந்து சில கருத்துக்கள், நினைவுபடுத்தும்வகையில் குறிப்புகளை எழுதிக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும்படி அட்டவணையை தயாரித்துக்கொள்ள வேண்டும்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிக்கும்போது ஒப்பிட்டுங படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், முக்கிய வினாக்கள் குறித்த ஐடியாக்கள் தோன்றும்.
மாதிரி வினாத்தாள்களின் உதவியுடன் படிப்பது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக அமையும்.
கடந்த 5 ஆண்டுகள் அளவிலான மாதிரி வினாத்தாள்களை ஆய்வு செய்து படிக்கும் பட்சத்தில் எந்த முறையில் கேள்விகள் வரும் என்ற ஒரு ஐடியா வரும். அதற்கேற்ற முறையில் நாம் தேர்வுக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ளலாம்.
குழுவாக இணைந்து படிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு தோன்றும் சந்தேகங்களை நாம் நிவர்த்தி செய்வதன் மூலம், பாடங்களை ஆழ்ந்துபடிக்கும் நிலை உண்டாகும். இது தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவும்.
ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்…