2020ம் கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு செய்முறை மற்றும் முதன்மை தேர்வுகளின் துவக்கம் குறித்த அறிவிப்பினை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2020ம் கல்வியாண்டிவ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை மற்றும் முதன்மை தேர்வுகள் துவங்கும் காலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளின் அடிப்படையில், தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் தொழில்முறை கல்விகளை தொடர்ந்து முதன்மை எனப்படும் Main தேர்வுகள் நடைபெறும். சிபிஎஸ்இ கல்விமுறையை பொறுத்தவரை, அதிக மாணவர்கள் எந்த வகுப்பில் உள்ளார்களோ, அந்த வகுப்புகளுக்கு முதலில் தேர்வும், குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளுக்கு அதன்பிறகும் தேர்வும் நடைபெறும்.
முதன்மை தேர்வுகள், பிப்ரவரி 15, 2020ம் தேதியன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்முறை தேர்வுகள் தேதி தொடர்பாக இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை. 9 மற்றும் 11ம் வகுப்புகளில், ஜூலை 18ம் தேதி வரை அட்மிசன் நடைபெற்றுள்ளதால், அதற்குள்ளாக சேர்ந்துள்ள மாணவர்கள், இந்த ஆண்டிற்கான செய்முறை தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
2018ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுத்தாள்களின் மறுமதிப்பீடு (revaluation), விவகாரம், டில்லி கோர்ட் படியேறியதால், 2019ம் ஆண்டில், பிப்ரவரி 15ம் தேதியே, செய்முறை தேர்வுகள் துவங்கப்பட்டன. 2020ம் ஆண்டிற்கான செய்முறை தேர்வுகள், இந்தாண்டின் டிசம்பர் மாதத்திலேயே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, நவம்பர் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.